பிளாஸ்டிக் உண்ணும் பாக்டீரியா கண்டு பிடிப்பு

ekuruvi-aiya8-X3

plastic-5467

ஜப்பானில் விஞ்ஞானிகள் குழு பிளாஸ்டிக்கை உண்ணும் பாக்டீரியாவை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளது.

பாலி எத்திலின் டெரிப்தாலேட் எனப்படும் பிஇடி பாலிமர் வகை பிளாஸ்டிக்கால் உருவான பொருள்கள் இன்று உலகம் முழுவதும் அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளன.

இதனைப் பயன்படுத்தி பாட்டில்கள் முதல் ஆடைகள் வரை அனைத்து விதமான பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன.

உபயோகப்படுத்திய பின்பு தூக்கியெறியப்படும் இவ்வகை பிளாஸ்டிக்குகள் மலை போல் குவிந்து உலகின் சுற்றுச் சூழலுக்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன.

2013-ஆம் ஆண்டில் மட்டும், உலக அளவில் 5.6 கோடி டன் பிஇடி வகை பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்பட்டது. இது அனைத்தும் குப்பைக்கழிவுகளாக மாறி சுற்றுப்புறச் சூழல் சீர்கேடு பிரச்னைகள் அதிகரித்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

இதுவரையில், பிஇடி பாலிமரை சிதைக்கும் சில பூஞ்சை இனங்கள் மட்டுமே கண்டறியப்பட்டிருந்தது. இந்நிலையில், அத்தகைய திறன் கொண்ட பாக்டீரியாவை ஜப்பான் விஞ்ஞானிகள் குழு முதன்முறையாக கண்டுபிடித்து அசத்தியுள்ளது.

பிஇடி என்ûஸம்களின் கட்டமைப்புகளை சிதைப்பதில் பூஞ்சை இனங்களின் திறன் மிகக் குறைவாக உள்ளது. அதனால், அவற்றை முழுவதுமாக மறுசுழற்சி செய்ய முடியாத நிலை இருந்தது.

இந்நிலையில், கியோ பல்கலைக்கழகம் மற்றும் கியோடோ தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள் குழு இணைந்து பிஇடி என்ûஸம்களை முழுமையாக சிதைக்கும் பாக்டீரியாக்களை கண்டறிந்துள்ளனர். பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் சுற்றுச் சூழல் மாசுபாடு பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு விஞ்ஞானிகளின் இந்தக் கண்டுபிடிப்பு பேருதவியாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜப்பான் விஞ்ஞானிகளின் இந்த ஆராய்ச்சி முடிவுகள் “ஜேர்னல் ஆப் சயின்ஸ்’ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

Share This Post

Post Comment