பாலியல் தொல்லை கொடுத்த புகைப்படக் கலைஞர் கைது

ekuruvi-aiya8-X3

can_sextourcher15ரொறன்ரோவின் மிகப் பிரபல்யமான புகைப்படக் கலைஞர்களில் ஒருவரான 39 வயதுடைய மார்க் கொலண்ட் என்பவர், 18 வயதுடைய யுவதி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.

புகைப்படமெடுக்கவென 18 வயதுடைய யுவதியின் வீட்டிற்கு சென்ற மேற்படி புகைப்படைக் கலைஞர் தனக்குத் பாலியல் தொல்லைக்கொடுத்ததாகச் குறித்த பெண் செய்த புகாரையடுத்து பொலிஸாரால் இவர் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து பொலிஸார் இவ்வாறு பாலியல் தொல்லைகளிற்கு மேலும் பலர் உட்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும் அவர்களை தங்களோடு தொடர்பு கொள்ளுமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும், அண்மைக்காலமாக புகைப்படக் கலைஞர்கள் இவ்வாறான தொல்லைகளிற்குள் உள்ளாகுவது தொடந்து வருவதால் அனைவரையும் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

Share This Post

Post Comment