பகற் பேணிடங்களின் காத்திருப்போர் பட்டியலுக்கு கட்டணம் செலுத்தும் கொடுமை முடிவுக்கு வருவதெப்போது !!

ekuruvi-aiya8-X3

டொராண்டோவில் பகற்பேணிடங்களில் தங்கள் குழந்தைகளை சேர்க்க காத்திருப்போர் பட்டியலில் இருப்போர் அதற்கான கட்டணத்தை செலுத்தி விட்டு காத்துக் கொண்டிருக்கும் அவல நிலைக்கு எதிராக பெற்றோர் தரப்பு போர்க்கொடி தூக்கத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக குறைந்த பட்சம் 10 பகற்பேணிடங்களை தேர்ந்தெடுத்து எதிக் கிடைக்கிறதென்று பார்ப்போம் என காத்துக் கிடக்கும் பெற்றோர்கள் அந்தப் 10 பகற்பேணிடங்களுக்கும் காத்திருப்போர் பட்டியலுக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்.

ஒன்டாரியோ அரசு இந்த சட்ட திட்டங்களை உடனடியாக நிறுத்த வேண்டும். காத்திருப்போர் பட்டியலில் உள்ளோர் கட்டணம் செலுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்பது உள்ளிட்டவற்றை வலியுறுத்தி இது தொடர்பில் சட்டத்தரணிகள் இருவர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இதற்கு ஆதரவு தெரிவித்துள்ள டொரோண்டோ நகர மக்களின் மின்னஞ்சல்கள், சமூக வலை குறுந்தகவல்கள் , தொலைபேசி உரையாடல்களுடன் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் இந்தப் பிரச்சினையை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டிய இக்கட்டான நிலைக்கு காத்லீன் வெய்ன் அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பான விவாதம் குயின்ஸ்பார்க்கில் எதிர் வரும் திங்களன்று நடக்க உள்ளதாய் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய நிலவரப்படி டொராண்டோவைச் சேர்ந்த ஒருவர் தன குழந்தையை பகற்பேணிடத்தில் சேர்க்க பதிவு செய்து விட்டு காத்திருந்தால் 20-30 காத்திருப்போர் பட்டியலில் பெயர் இருப்பதற்கு மட்டும்  $150 கட்டணமாகச் செலுத்த வேண்டிய நிலை உள்ளது குறிப்பிடத்தக்கது.bwdaycare008.jpg.size.xxlarge.letterbox

Share This Post

Post Comment