யாழ். மாவட்டத்தில் பெரும்போகத்தில் 2100 கெக்டேயர் நிலப்பரப்பில் வெங்காய செய்கை!

ekuruvi-aiya8-X3

FB_IMG_1485342067848யாழ். மாவட்டத்தில் பெரும்போகத்தில் 2100 கெக்டேயர் நிலப்பரப்பில் வெங்காய செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் 30802.8 மெட்ரிக்தொன் விளைச்சலை எதிர்பார்ப்பதாகவும் யாழ் மாவட்ட செயலக புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ் மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலர் பிரிவுகளிலும் இந்த வெங்காய செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி நெடுந்தீவு பிரதேச செயலாளர் பிரிவில் 10 கெக்டேயர் நிலப்பரப்பில் வெங்காய செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் 147 மெட்ரிக்தொன் விளைச்சல் எதிர்பார்ப்பதாகவும், வேலணையில் 45கெக்டேயர் நிலப்பரப்பில் 807 மெட்ரிக்தொன் விளைச்சல் எதிர்பார்ப்பதாகவும், ஊர்காவற்துறை பிரிவில் 15கெக்டேயர் நிலப்பரப்பில் 29 மெட்ரிக்தொன் விளைச்சல் எதிர்பார்ப்பதாகவும், காரைநகரில் 2கெக்டேயர் நிலப்பரப்பில் 147 மெட்ரிக்தொன் விளைச்சல் எதிர்பார்ப்பதாகவும், சங்கானையில் 100கெக்டேயர் நிலப்பரப்பில் 1467 மெட்ரிக்தொன் விளைச்சல் எதிர்பார்ப்பதாகவும், நல்லூரில் 30கெக்டேயர் நிலப்பரப்பில் 440மெட்ரிக்தொன் விளைச்சல் எதிர்பார்ப்பதாகவும், யாழ்ப்பாணத்தில் 3கெக்டேயர் நிலப்பரப்பில் 44 மெட்ரிக்தொன் விளைச்சல் எதிர்பார்ப்பதாகவும், சண்டிலிப்பாயில் 155கெக்டேயர் நிலப்பரப்பில் 2274 மெட்ரிக்தொன் விளைச்சல் எதிர்பார்ப்பதாகவும், தெல்லிப்பளையில் 245கெக்டேயர் நிலப்பரப்பில் 3594 மெட்ரிக்தொன் விளைச்சல் எதிர்பார்ப்பதாகவும், உடுவிலில் 225கெக்டேயரில் பயிரிடப்பட்டுள்ளதாகவும் 3740 மெட்ரிக்தொன் விளைச்சல் எதிர்பார்ப்பதாகவும், சாவகச்சேரியில் 130கெக்டேயரில்1906 மெட்ரிக்தொன் எதிர்பார்ப்பதாகவும், கோப்பாயில் 500 கெக்டேயரில் 7334 மெட்ரிக்தொன் எதிர்பார்ப்பதாகவும், கரவெட்டியில் 190கெக்டேயரில் 2787 மெட்ரிக்தொன் விளைச்சல் எதிர்பார்ப்பதாகவும், பருத்தித்துறையில் 300கெக்டேயரில் 4400 மெட்ரிக்தொன் விளைச்சல் எதிர்பார்ப்பதாகவும், மருதங்கேணியில் 110கெக்டேயர் நிலப்பரப்பில் கெக்டேயரில் 1613 மெட்ரிக்தொன் விளைச்சல் எதிர்பார்ப்பதாகவும் இப்புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

FB_IMG_1485342070186 FB_IMG_1485342062943-e1485354058235

FB_IMG_1485342060111

Share This Post

Post Comment