பேராதனை மாணவர்கள் 10 பேருக்கு வகுப்புத் தடை

ekuruvi-aiya8-X3

perathanai444பேராதனை பல்கலைக்கழக இணைந்த சுகாதார விஞ்ஞான கற்கை பீடத்தின் 10 மாணவர்களுக்கு தற்காலிக வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அப் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் சிலர் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த 10 பேருக்கும் இரு வாரங்களுக்கு இவ்வாறு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக, பேராதனை பல்கலைக்கழக நிர்வாகிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த 22ம் திகதி இரவு அந்த பல்கலைக்கழகத்தின் இணைந்த சுகாதார விஞ்ஞான கற்கை பீடத்தைச் சேர்ந்த இரு மாணவக் குழுக்களிடையே மோதல் ஏற்பட்டது.

இதில் ஐவர் காயமடைந்தனர். இவர்கள் பேராதனை வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment