ஜெனீவாப் பேரணிக்கு சீமான், வைகோ அழைப்பு!

sdsd

ygo_cmanதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கி கைகோர்த்து நீதி கேட்க வாரீர் என நாம் தமிழர் இயக்க தலைவர் சீமானும், மதிமுக பொதுச் செயலாளர் வைக்கோவும் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி..ஜெனீவா தொடரூந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பூங்காவில் ஆரம்பித்து ஐ.நா சபை முன்றல் வரை…14.03.2016 திங்கட்கிழமை, மதியம் 14:00 முதல் 17:30 மணிவரை நடைபெறவுள்ள கவனயீர்ப்பில் எமது உரிமையை உலகறியச் செய்யும் வகையில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றார்கள்.

உலகத்தில் எல்லோராலும் கைவிடப்பட்ட, நமக்கென்று குரல்கொடுக்க, ஆதரவாக கரம்கொடுக்க, எவருமற்ற நிலையில் தனித்துவிடப்பட்ட தமிழ்த் தேசிய இனத்தின் மக்கள் நாம்.

அழித்து ஒழிக்கப்பட்ட இனத்தின் மக்களாக நாம் இருக்கின்றோம். நமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கி ஒன்றுதிரண்டு அணிதிரள்வோம் வாரீர் என நாம் இயக்கத் தலைவர் சீமான் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழீழ மக்களே நம்முடைய கடமை முடிந்துவிட்டதாக கருதாதீர்கள். உலகத்தில் எந்த இனமும் விடுதலை அடையும்வரை, அடிமை விலங்கு உடைத்து நொருங்கும்வரையில் போராட்டத்தைக் கைவிடவில்லை.

எனவே ஐ.நா. நோக்கி நீதி கேட்க அலையெனத் திரளுங்கள் என உதிர அணுக்களுடனும் உணர்ச்சியுடனும் இமைப்பொழுதும் நிறைந்திருக்கின்ற எனது சகோதர மக்களாகிய ஈழத் தமிழர்களே என வைக்கோஅழைப்பு விடுத்துள்ளார்.

Share This Post

Post Comment