தீப்பற்றி எரியும் காரில் இளம் பெண்ணை கருகவிட்டு டிரைவர் தப்பியோட்டம்

ekuruvi-aiya8-X3

man-leaves-indian-origin-woman-to-die-in-blazing-carஅமெரிக்காவின் நியூஜெர்சி மாநிலத்தில் உள்ள புரூக்ளின் – குயின்ஸ் எக்ஸ்பிரஸ் சாலையில் கடந்த வெள்ளிக்கிழமை கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஹர்லின் கிரிவால் (25), பயணம் செய்து கொண்டிருந்தார். சையத் அகமது(23) என்ற டிரைவர் காரை ஓட்டிச் சென்றார்.

அப்போது திடீரென காரில் இருந்து தீப்பொறி கிளம்பியது. சிறிது நேரத்தில் கார் பற்றி எரிய ஆரம்பித்தது. இதில் ஹர்லின் சிக்கிக் கொண்டார். கார் முழுவதும் தீப்பற்றி எரிந்ததால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஆனால், தீ பரவிய சிறிது நேரத்தில் அகமது காரிலிருந்து கீழே குதித்துவிட்டார். அதில் அவருக்கு சிறிது தீக்காயம் ஏற்பட்டது. அதன்பின் அவர் வாடகை காரில் சென்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தகவலறிந்து வந்த போலீசார் தீப்பற்றிய காரை அணைத்தனர். காரில் கருகி கிடந்த ஹர்லின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share This Post

Post Comment