ஓய்வின்றி உழைத்தவருக்கு அபராதம்

Facebook Cover V02

Penalty-for-Worked-without-restஓய்வின்றி உழைத்ததாகக் கூறி பிரான்ஸ் நாட்டில் ஒருவருக்கு ரூ. 2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. லூசிக்னி-சுர்- பார்ஸ் எனும் நகரத்தைச் சேர்ந்த பேக்கரி கடைக்காரரான செட்ரிக் வைவர்  என்பவர் அவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டவர்.

கடந்த ஆண்டின் கோடைகாலத்தில் வாரத்தின் 7 நாட்களும் தனது பேக்கரியைத் திறந்து வைத்திருந்ததற்காக செட்ரிக் வைவருக்கு மூவாயிரம் யூரோக்கள் (ரூ. 2.47 லட்சம்) அபராதமாக விதிக்கப்பட்டிருக் கிறது.

வியாபார நிறுவனங்களுக்கு வாரத்தில் ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்ற சட்டத்தை மீறியதற்காக அவருக்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும் நகரான லூசிக்னியின் மேயர் உள்ளிட்ட பலர் செட்ரிக்குக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

“இது சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் பகுதி. சுற்றுலாவாசிகள் அதிகம் வரும் நாளில் கடைகள் மூடியிருப்பதை விட மோசமான விஷயம் எதுவும் இருக்க முடியாது” என்று மேயர் கிறிஸ்டியன் பிரானில் கூறி யிருக்கிறார்.

ஆனால் வியாபாரிகள் சங்கத்தைச் சேர்ந்த எரிக் ஷெரர், உள்ளூர் சட்டங்கள் மதிக்கப்பட வேண்டும் என்கிறார்.

“பேக்கரி உள்பட உணவுத்தொழில் நிறுவனங்கள் அனைத்துக்கும் வாரத்தில் ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்பது உள்ளூர் சட்டம். நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட யாரும் அதிகம் உழைக்கக்கூடாது என்பதற்காக இந்தச் சட்டம் வகுக்கப்பட்டுள்ளது” என்று கூறிய அவர், “மக்களுக்கு ஒரு நாளாவது ஓய்வு வேண்டும். அவர்களை தொடர்ந்து வேலை செய்ய அனுமதிக்க முடியாது. கட்டாயம் முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் ஓய்வு வேண்டும்” என்றார்.

உழைக்காமல் இருப்பதைத்தான் தவறு என்கிறோம். ஆனால் இங்கே, அதிகம் உழைத்தாலும் தப்புன்னு சொல்றாங்களே!

Share This Post

Post Comment