தகுதியற்றவர்களின் பெயர்கள் எழுத்து மூலம் கோரப்பட்டுள்ளது

ekuruvi-aiya8-X3

election2017 வாக்காளர் பெயர் பட்டியலில் தகுதியற்றவர்களின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டிருந்தாலும் வாக்காளர்களின் பெயர் உரிய வகையில் அவர்களது உள்ளுராட்சித் தொகுதிக்கான பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருக்காவிட்டாலும், அதுதொடர்பில் அடுத்த மாதம் 5ம் திகதிக்கு முன்னதாக மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு எழுத்துமூலம் தெரியப்படுத்த முடியும்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவின் கையொப்பத்துடனான ஊடக அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

93 உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் 2017ம் ஆண்டு வாக்காளர் பெயர் பட்டியலின் அடிப்படையில் நடைபெறவுள்ளது.

இந்த வாக்காளர் பெயர் பட்டியல் தேர்தல் நடைபெறவுள்ள உள்ளுராட்சிமன்றங்களில்
காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Share This Post

Post Comment