சசிகலா, தினகரனை முறையாக நீக்கினால் தான் பேச்சுவார்த்தை: ஓ.பி.எஸ் அணி அதிரடி

ekuruvi-aiya8-X3

dialogue-Only-after-complete-elemination-fo-Sasikalaஅ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைப்பது தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகளுடன் இன்று காலை ஆலோசனை நடத்தினார். 12 எம்.பி.க்கள், 11 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.

ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் கே.பி.முன்சாமி பேசியதாவது:-

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு மாநில அரசு வலியுறுத்த வேண்டும், சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை நீக்க வேண்டும் என்று இரண்டு முக்கிய கோரிக்கையை வலியுறுத்தி பன்னீர் செல்வம் தர்ம யுத்தத்தை தொடக்கினார்.

இதனையடுத்து தினகரன் உள்ளிட்ட சசிகலா குடும்பத்தினரை ஒதுக்கி வைக்கிறோம் என்றும் வெளியேற்றி விட்டோம் என்றும் எடப்பாடி பழனிச்சாமி அணியினர் சொல்லி இருக்கிறார்கள். இந்த அறிவிப்பு எங்களது போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றி என்று ஓபிஎஸ் கருத்து தெரிவித்தார்.

இருப்பினும் சசிகலாவை பொதுச் செயலாளர் என்று தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார்கள்.

எனவே, அரசியல் குழுவின் வாயிலாக டெல்லியிலே அவர்கள் சமர்பித்த பிரமாண பத்திரித்தை வாபஸ் பெற வேண்டும். அதனையடுத்து, சசிகால் மற்றும் தினகரனிடம் இருந்து முறைப்படி ராஜினாமா கடிதம் பெற வேண்டும்.
பின்னர், கழகத்தின் சட்ட விதிகளின் படி கட்சியில் இருந்து அவர்கள் வெளியேற்றப்பட வேண்டும்.

ஏற்கனவே முன் வைத்த இரண்டு கோரிக்கைகளை நிறைவேற்றினால் பேச்சுவார்த்தைக்கு முன் வருவோம்.

இவ்வாறு கூறினார்

Share This Post

Post Comment