ட்ரம்ப் நிர்வாகத்துடன் முதல் அதிகாபூர்வ பேச்சை ஆரம்பித்தது சிறீலங்கா!

Thermo-Care-Heating

us-srilankaஅமெரிக்காவில் புதிதாக பதவியேற்றுள்ள ரொனால்ட் ட்ரம்ப் அரசாங்கத்துடன், சிறீலங்கா அரசாங்கம் நேற்று முதல்முறையாக அதிகாரபூர்வ பேச்சுக்களை ஆரம்பித்துள்ளது.

நியூயோர்க்கில் நடந்த இந்தப் பேச்சுக்களில், சிறீலங்கா அரசாங்கத்தின் தரப்பில், அமெரிக்காவுக்கான தூதுவர் பிரசாத் காரியவசம் பங்கேற்றுள்ளார்.

இருதரப்பு உறவுகள் குறித்து இந்த பேச்சுக்களில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், சிறீலங்காவின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் மற்றும் வரப்போகும் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் என்பன தொடர்பாகவும், இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக, சிறீலங்கா அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும், இந்தச் சந்திப்பில் அமெரிக்க அரச தரப்பில் பங்கேற்ற பிரதிநிதிகள் யார் என்ற விபரங்கள் ஏதும் வெளியாகவில்லை.

ideal-image

Share This Post

Post Comment