புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தை தயாரிக்க சிறிலங்காவுக்கு ஐ,நாவும் உதவி

ekuruvi-aiya8-X3

sagala-unநடைமுறைகளுக்கு ஏற்பவும், ஐ.நா பாதுகாப்புச் சபை தீர்மானங்களுக்கு அமைவாகவும், பயங்கரவாத தடைச்சட்டத்துக்குப் பதிலாக, விரிவான தீவிரவாத முறியடிப்பு சட்டம் ஒன்றை கொண்டு வருவதற்கு, சிறிலங்காவுக்கு உதவுவதாக ஐ.நாவின் தீவிரவாத முறியடிப்பு குழுவின் நிறைவேற்றுப் பணியகம் வாக்குறுதி அளித்துள்ளது.

நியுயோர்க்கில் கடந்த திங்கட்கிழமை சிறிலங்காவின் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க, ஐ.நாவின் தீவிரவாத முறியடிப்பு குழுவின் நிறைவேற்றுப் பணியகத்தின், நிறைவேற்றுப் பணிப்பாளர், ஜீன் போல் லபோட்டைச் சந்தித்த போதே இந்த உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பின் போது உலகளாவிய ரீதியில் தலைதூக்கியுள்ள ஐ.எஸ் பயங்கவாதம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. மேலும் சிறிலங்காவில் பயங்கரவாத குழுக்களின் அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும்,ஆலோசனை நடத்தப்பட்டது.

பயங்கரவாதத்தை முழுமையாக இல்லாமல் செய்வதற்கு தொழில்நுட்ப ரீதியான உதவிகளை ஐ.நா வழங்கும் என்றும் ஜனநாயக வலுவூட்டல் செயற்பாடுகளுக்கு ஐ.நா பூரண ஆதரவினை வழங்கும் என நிறைவேற்று பணிப்பாளர் ஜீன் லெபோட் குறிப்பிட்டுள்ளார்.

Share This Post

Post Comment