பிரித்தானிய தேர்தல்: பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு

Facebook Cover V02

Voters-queue-outside-a-po-006-100x90கடந்த இரண்டு வாரங்களில் இருவேறு பயங்கரவாத தாக்குதல்களை எதிர்கொண்ட பிரித்தானிய மக்கள் இன்றைய பொதுத் தேர்தல் வாக்கெடுப்பில் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியில் மிகவும் பரபரப்பாக இந்த வாக்கெடுப்பு இடம்பெறுகின்றது.

தேர்தலுக்கு முன்னதான கருத்துக்கணிப்புக்களின் பிரகாரம் பிரதமர் தெரேசா மே வெற்றிபெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும் பயங்கரவாத அச்சுறுத்தல், சமத்துவமின்மை, பொருளாதாரம், பிரெக்சிற் விவகாரம் என தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் உறுதிமொழிகளுக்கு அமைய மக்கள் வாக்களித்து வருகின்றனர்.

வாக்களிக்கும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு எதிர்பார்புடனேயே வாக்களிக்கின்றனர்.

பிரித்தானியாவில் மாத்திரமின்றி சர்வதேச ரீதியில் பாரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பிரித்தானிய பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக 46.9 மில்லியன் மக்கள் தகுதி பெற்றுள்ளனர். அந்தவகையில், நாடளாவிய ரீதியில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவுகள் இடம்பெறுகின்றன.

இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்கெடுப்பு இன்று இரவு 10 மணி வரை இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment