பயங்கரவாத சட்டத்தை விட மோசமான ‘மகாவலி எல்’ திட்டம்?

Facebook Cover V02

ravikaran_1-300x171நாட்டிலுள்ள மிகவும் மோசமான சட்டமாகக் கருதப்படும் பயங்கரவாத தடைச்சட்டத்தைவிட, மகாவலி அதிகாரசபையினால் முன்னெடுக்கப்படும் மகாவலி எல் வலையத் திட்டம் தமிழ் மக்களின் இருப்பிற்கே ஆபத்தை ஏற்படுத்தும் என வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனால் மகாவலி எல் வலையத்தை கைவிடுமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையிடம் மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மகாவலி எல். வலய திட்டமானது மிகவும் பாரதுர்ரமான என்பதை தெரிவித்து அதற்கு எதிராக வடமாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசாங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள போதிலும் அதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், அதன் தலைவர்களும் இன்னமும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று வட மாகாண சபையில் அங்கம் வகிக்கும் மற்றுமொரு வன்னி உறுப்பினரான அன்ரனி ஜெகநாதன் குற்றம் சாட்டியுள்ளார்.

Share This Post

Post Comment