லண்டனில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல் : பலர் உயிரிழந்துள்ளதாக தகவல்…!

Thermo-Care-Heating

Police_are_seen_near_Finsbury_Parkலண்டனின் வடக்கு பின்ஸ்பெரி பார்க் பகுதியில் பள்ளி அருகே பாதசாரிகள் மீது வாகனம் ஒன்றினால் மோதி தாக்குதல் நடாத்தப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாகவும் பலர் உயிரிழந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமியர்கள் எனவும் இது ஒரு இனவாத தாக்குதல் என தற்போதைய சூழலில் அறிவிக்க முடியாது எனவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்த தாக்குதல் தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ளதாகவும் குறித்த நபரிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது.

தற்போது சம்பவம் நடந்த பகுதியில் பாதுகாப்பு கருதி ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Police_are_seen_near_Finsbury_Parkllllllllllll Police_are_seen_near_Finsbury_Parkkkk

ideal-image

Share This Post

Post Comment