பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டம் கொண்டுவர அமெரிக்கா வலியுறுத்து!

Facebook Cover V02

athul-keshapசிறீலங்கா அரசாங்காம் பயங்கரவாதச் சட்டத்திற்குப் பதிலாக, தேசிய பாதுகாப்புச் சட்டக் கட்டமைப்பொன்றைக் கொண்டுவரவேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

தகவலறியும் சட்டமூலம் தொடர்பான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வொன்று கொழும்பில் கடந்த திங்கட் கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

‘தம்மை தெரிவு செய்த குடிமக்களுக்கு நம்பகமாக அரசாங்க அதிகாரிகள் இருக்க வேண்டும் என ஜனநாயகம் கோருகிறது. அந்த நம்பகத்தன்மைக்கு வெளிப்படைத் தன்மை அவசியம்.

மிக முக்கியமான நல்லாட்சி மறுசீரமைப்புக்கள் மற்றும் மனித உரிமைகள் வாக்குறுதிகளில் நீங்கள் தேர்ச்சி எட்டும் போது அமெரிக்கா ‘உங்கள் பக்கம்’ இருக்கும் என கடந்த ஆண்டு சிறீலங்கா வருகைதந்திருந்த இராஜாங்க அமைச்சர் ஜோன் கெரி தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, கடந்த 16 ஆண்டுகளில் எமது இராஜதந்திர உறவுகள் ஒருபோதுமில்லாதவாறு உயர்ந்த நிலையில் இருக்கின்றன என்றும் தெரிவித்தார்.

Share This Post

Post Comment