ஆற்றுக்குள் பஸ் பாய்ந்த பயங்கர விபத்தில் 10 பேர் பலி

Facebook Cover V02

10-killed-in-bus-accident-in-Chinaசீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள குயிஷோவு மாகாணத்தில் உள்ள கையாங்கில் இருந்து வெங்கான் பகுதிக்கு 19 பேர் அமரக்கூடிய மினி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. ஆற்று மேம்பாலத்தின் வழியாக சென்றபோது உள்ளூர் நேரப்படி இன்று காலை சுமார் 8.30 மணியளவில் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து திடீரென ஆற்றுக்குள் பாய்ந்தது.

இந்த கோர விபத்தில் பத்து பயணிகள் பலியானதாகவும் 5 பேர் படுகாயம் அடைந்ததாகவும், 4 பேர் மாயமானதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பேருந்து கவிழ்ந்த ஆற்றுப் பகுதியில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Dhina-2._L_styvpf

Share This Post

Post Comment