பதுக்கி வைக்கப்பட்டுள்ள சொத்துக்களை மீட்டு எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் – ஜனாதிபதி

ekuruvi-aiya8-X3

maithiriபதுக்கி வைக்கப்பட்டுள்ள சொத்துக்களை மீட்டு எடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.இதற்காக பிரித்தானியா, அமெரிக்கா, இந்தியா மற்றும் சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளின் உதவி நாடப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சொத்துக்கள் முடக்கப்பட்டமை மற்றும் சொத்துக்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளமை குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் இதற்கு உலக வங்கியின் ஒத்துழைப்பு நாடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஊழல் மோசடிகளை தடுத்து நிறுத்துவதற்கு உலக நாடுகளின் தலைவர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

உள்நாட்டு சட்டம் ஒழுங்குத்துறைகளை வலுப்படுத்துவதன் மூலம் இதற்கு காத்திரமான முறையில் பங்களிப்பினை வழங்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஊழல் மோசடிகளை இல்லாதொழிப்பதற்கு இலங்கை முழு அளவில் நடவடிக்கை எடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்

Share This Post

Post Comment