மஹிந்தவின் பாதுகாப்பு குறித்து ராஜதந்திரிகளுக்கு கூட்டு எதிர்க்கட்சி விளக்கம்

Thermo-Care-Heating

mahina_06முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பாதுகாப்பு குறித்து வெளிநாட்டு ராஜதந்திரிகளுக்கு கூட்டு எதிர்க்கட்சியினர் சார்பில், முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுக்கு மஹிந்தவின் பாதுகாப்பு நீக்கப்பட்டமை குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸவின் இராணுவப் பாதுகாப்பு குறைக்கப்பட்டமை குறித்தும், இராணுவப் பாதுகாப்பு நீக்கப்பட்டதன் மூலம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிற்கு ஏற்படக் கூடிய ஆபத்து குறித்து அந்தந்த நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுக்கு விளக்கம் அளிக்குமாறு, தூதுவர்கள் ராஜதந்திரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமது இந்தக் கோரிக்கை தொடர்பில் சில நாடுகள் சாதகமான பதிலை அளித்துள்ளதாக ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொலை அங்கிககள் மீட்கப்பட்டுள்ள நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ideal-image

Share This Post

Post Comment