ஓ.பன்னீர்செல்வத்துக்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு

ekuruvi-aiya8-X3

pannerselvam-10-600முன்னாள் முதல்-அமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில் இரட்டை சிலை முடக்கப்பட்டதால் ஓ.பன்னீர் செல்வம் அணியினர் இரட்டை மின்விளக்கு சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.

ஆர்.கே. நகர் தேர்தலில் போட்டியிடாமல் விலகிக் கொள்ளுமாறு ஓபிஎஸ் அணியின் வேட்பாளர் மதுசூதனனுக்கு மிரட்டல்கள் வந்தன. மேலும் ஓ.பன்னீர் செல்வத்தின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் அந்த அணியினர் கூறி வந்தனர்.

தேனி அருகே ஓபிஎஸ் கார் மீது மர்ம நபர்கள் கல்வீசித் தாக்குதலையும் நடத்தியிருந்தனர். இதைத் தொடர்ந்து மத்திய படையின் பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கிடம் ஓபிஎஸ் அணியினர் மனு அளித்தனர்.

இந்நிலையில் முன்னாள் முதல்-அமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 11 சிஆர்பிஎப் வீரர்கள் பன்னீர்செல்வத்துக்கு பாதுகாப்பு வழங்குகின்றனர்.

Share This Post

Post Comment