இராணுவத்தையோ தேசிய பாதுகாப்பையோ பலவீனப்படுத்தமாட்டேன் – ஜனாதிபதி

ekuruvi-aiya8-X3

maithiri4552தேச துரோகியாவதற்கு தான் ஜனாதிபதியாக நியமிக்கப்படவில்லை என தென் கொரியாவில் வசிக்கும் இலங்கை பிரஜைகளை சந்தித்து கலந்துரையாடும் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சமஷ்ட்டி அதிகாரத்தை பெற்றுக்கொடுப்பதற்கோ அல்லது நாட்டை பிளவுப்படுத்துவதற்கான அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதற்கோ தாம் தயார் இல்லை எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் இராணுவத்தையோ தேசிய பாதுகாப்பையோ பலவீனப்படுத்தும் நோக்கில் நாட்டைப் பொறுப்பேற்கவில்லை நாட்டில் நிலவிய மோசமான நிலையை மாற்றுவதற்கே தான் ஜனாதிபதியாக நியமனம் பெற்றதாக அவர் தெரிவித்துள்ளார்.

வரலாற்றில் இடம்பெற்ற தவறுகளை திருத்தி வாழ்நாள்முழுதும் துன்பத்தில் வாடும் இலங்கையர்களுக்கு சமாதானத்தையும் , அன்யோணியத்தை ஏற்படுத்துவதற்கான சிறந்த சூழலை கட்டியெழுப்புவதே தனது நோக்கம் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேசத்தின் அனைத்து நாடுகளின் நன்மதிப்பையும் தற்போது இலங்கை பெற்றுக் கொண்டுள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

Share This Post

Post Comment