பதன்கோட் தாக்குதல், பிரதமர் மோடி பாகிஸ்தானிடம் சரண் அடைந்துவிட்டார் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

Facebook Cover V02

aravinபதன்கோட் தாக்குதல் விவகாரத்தில் பாகிஸ்தான் விசாரணை அதிகாரிகளை அனுமதித்த விவகாரத்தில் பிரதமர் மோடியை தாக்கிஉள்ள டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மோடி பாகிஸ்தானிடம் சரண் அடைந்துவிட்டார் என்று கூறிஉள்ளார்.

பதன்கோட் விமானப்படை தளத்தின் மீது ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய விவகாரத்தில் பாகிஸ்தான் அமைத்த கூட்டு விசாரணை குழு இந்தியாவிற்கு வருவதற்கு ஏற்கனவே காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இருப்பினும் பாகிஸ்தான் குழு இந்தியாவிற்கு வந்து விசாரித்தது, தாக்குதல் நடந்த பகுதியினை ஆய்வு செய்தது. இந்நிலையில் தாக்குதலை அரங்கேற்றியதே இந்தியாதான் என்று பாகிஸ்தானின் கூட்டு விசாரணை குழு தெரிவித்ததாக பாகிஸ்தான் மீடியா செய்தி வெளியிட்டு உள்ளது.

இந்நிலையில் இவ்விவகாரத்தில் பிரதமர் மோடியை தாக்கி உள்ள டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் மோடி பாகிஸ்தானிடம் சரண் அடைந்துவிட்டார் என்று கூறி உள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், “பாகிஸ்தான் மற்றும் அதன் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. தீவிரவாதத்தை பரப்பி வருகிறது என்று உலகத்திற்கு நாம் கூறிவருகிறோம். ஆனால் இப்போது பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யை இங்கு அழைத்து அவர்களுக்கு குற்றமற்றவர்கள் என்று நற்சான்றிதழ் வழங்கிவிட்டோம். கடந்த 65 ஆண்டுகளில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு நற்சான்றிதழ் வழங்கிய முதல் பிரதமர் மோடி ஆவார்” என்று கூறினார்.

பிரதமர் மோடி மற்றும் நவாஸ் செரீப் இடையிலான சந்திப்பு தொடர்பாக கேள்வி எழுப்பிய கெஜ்ரிவால் “பிரதமர் மோடி பாகிஸ்தான் சென்று நவாஸ் செரீப்பை சந்தித்து பேசிய ஒரு வாரத்திற்குள் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது. நம்மை தாக்கியவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. நவாஸ் செரீப்புடன் என்ன ஒப்பந்தம் செய்யப்பட்டது என்பதை பிரதமர் மோடி தெரிவிக்கவேண்டும்,” என்று வலியுறுத்தி உள்ளார். பதன்கோட் தாக்குதல் விவகாரத்தில் பாரதீய ஜனதா இரட்டை நிலைப்பாடு கொண்டு உள்ளது. பாரதீய ஜனதா ஒருபக்கம் ’பாரத் மாதா கி ஜே’ என்று முழங்க சொல்கிறது, மறுபுறம் ஐ.எஸ்.ஐ.யை இந்திய மண்ணில் அனுமதிக்கிறது என்றும் கெஜ்ரிவால் ஏற்கனவே சாடியிருந்தார்.

Share This Post

Post Comment