ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற சிந்துவுக்கு பிரமாண்ட பாராட்டு விழா

ekuruvi-aiya8-X3

shinduரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற சிந்துவுக்கு ஐதராபாத் கச்சிபவுளி மைதானத்தில் பிரமாண்ட பாராட்டு விழா நடத்தப்பட்டது. திறந்தவெளி வாகனத்தில் கை அசைத்தபடி மைதானத்துக்குள் சிந்து வந்தார். வரும் வழியெல்லாம் சிந்துவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று தாயகம் திரும்பிய பி.வி.சிந்துவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. ஐதராபாத் விமான நிலையத்தில் இரு மாநில அரசு அதிகாரிகள் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர். சிந்துவின் பயிற்சியாளர் கோபிசந்தையும் பாராட்டி வரவேற்றனர்.
ஒலிம்பிக்கில் மகளிர் பேட்மிண்டன் இறுதி போட்டியில் தோற்றாலும், வெள்ளி வென்று சாதித்தார் பி.வி.சிந்து. பேட்மிண்டனில் வெள்ளி வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற புகழை பெற்றார்.

பி.வி.சிந்து ஐதராபாத் விமான நிலையம் வந்ததும் அவருக்கு மாலை அணிவித்தும், இனிப்பு ஊட்டியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதைத் தொடர்ந்து, திறந்த பேருந்தில் ஐதராபாத் விமான நிலையத்திலிருந்து சிந்து மற்றும் கோபிசந்தும் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டார் . இதனால் ஐதராபாத் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. .

Share This Post

Post Comment