ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்ஸ்சில் இந்தியா பதக்கம் வெல்ல வாய்ப்பு: இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார் தீபா கர்மாகர்

ekuruvi-aiya8-X3

theepaரியோ ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் இந்தியாவின் தீபா கர்மாகர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். ஒலிம்பிக் வரலாற்றில் ஜிம்னாஸ்டிக்ஸ் இறுதிச் சுற்றுக்கு இந்தியா நுழைவது இதுவே முதல் முறையாகும். வால்ட் பிரிவு ஜிம்னாஸ்டிக்ஸ் தகுதி சுற்று இந்தியாவின் தீபா கர்மாகர் 14.85 புள்ளிகள் பெற்று 8வது இடத்தை பிடித்தார். இதன் மூலம் இறுதிச் சுற்றுக்கு தேர்வானார் அவர். 22 வயதான தீபா கர்மாகர் திரிபூரா மாநிலத்தைச் சேர்ந்தவர்.

காமன்வெல்த், ஆசிய விளையாட்டு போட்டிகளில் ஜிம்னாஸ்டிக்ஸ்சில் பதக்கங்களை பெற்று சாதனைகளை புரிந்துள்ளார். இதனிடையே ஒலிம்பிக் வில் வித்தையில் தீபிகா குமாரி, பாம்பலா தேவி, லக்‌ஷ்மி ராணி ஆகியோரை கொண்ட இந்திய மகளிர் அணி காலிறுதியி்ல் ரஷ்யாவில் நூழிலையில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டது. மகளிருக்கான ஹாக்கி போட்டியில் இந்தியா 2-2க்கு என்ற கோல் கணக்கில் ஜப்பானிடம் டிரா செய்து 2வது சுற்றுக்கு முன்னேறியது.

Share This Post

Post Comment