போலி கடவுச் சீட்டு: இலங்கை தம்பதி மீது வழக்குப் பதிவு

ekuruvi-aiya8-X3

passportபோலி ஆவணங்களைப் பயன்படுத்தி கடவுச் சீட்டு பெற்றதாக தமிழகத்தின் திருப்பூரில் வசித்து வரும் இலங்கை தம்பதி மீது அனுப்பர்பாளையம் பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இலங்கையைச் சேர்ந்தவர் தியாகராஜன் (45). இவரது மனைவி மேகலா (42). இத்தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் இருந்து திருச்சிக்கு வந்துள்ளனர். இவர்கள், கடந்த 3 ஆண்டுகளாக திருப்பூரை அடுத்த நெருப்பெரிச்சல் பகுதியில் வசித்து வருகின்றனர்.

தியாகராஜன், இந்தியாவில் பிறந்ததாக போலி ஆவணங்களைப் பயன்படுத்தி குடும்ப அட்டை, கடவுச் சீட்டு ஆகியவற்றைப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அந்தக் கடவுச் சீட்டைப் பயன்படுத்தி இலங்கை செல்வதற்காக தியாகராஜனும், மேகலாவும் கடந்த ஏப்ரல் 17-ம் திகதி மதுரை விமான நிலையத்துக்குச் சென்றனர்.

அங்கு, அதிகாரிகள் நடத்திய சோதனையில் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி தியாகராஜன் கடவுச் சீட்டு பெற்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

மேலும், இதுகுறித்து விசாரணை நடத்த கோவை கடவுச் சீட்டு மண்டல அலுவலகத்துக்குப் பரிந்துரைக்கப்பட்டது. விசாரணையில், தியாகராஜன் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி கடவுச் சீட்டு பெற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து கோவை கடவுச் சீட்டு மண்டல அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில், தலைமறைவான தியாகராஜன், மேகலாவை அனுப்பர்பாளையம் பொலிஸார் தேடி வருகின்றனர்.

Share This Post

Post Comment