3 ஆயிரம் கிலோ எடை பறவையின் புதை படிவம் கண்டுபிடிப்பு

Thermo-Care-Heating

thousand-kilos-bird-discovery-of-the-burial-Form-in-chinaசீனாவில் பழங்காலத்தில் வாழ்ந்த 3 ஆயிரம் கிலோ எடை கொண்ட ராட்சத பறவையின் புதைப்படிவம் ஒன்று தற்போது சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ராட்சத மிருகமான டைனோசர்களின் புதைப்படிம் உலகம் முழுவதும் ஆங்காங்கே கிடைத்து வருகிறது. இதேபோல டைனோசர் காலத்தில் வாழ்ந்த ராட்சத பறவையின் புதைப்படிவம் ஒன்று தற்போது சீனாவில் கிடைத்துள்ளது. அங்குள்ள கனான் என்ற இடத்தில் ஆய்வு செய்தபோது இதன் புதைப்படிவம் கிடைத்தது.

அதை வைத்து பார்க்கும்போது இந்த பறவை 3 ஆயிரம் கிலோ எடையும், 8 மீட்டர் உயரமும் இருந்திருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள். இந்த பறவைக்கு பெய்பிலாங் என்று பெயரிட்டுள்ளனர். இது ஒரு பெரிய லாரி அளவுக்கு கூடுகட்டி வாழ்ந்திருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

1990-ம் ஆண்டு வாக்கில் இந்த பகுதியில் 40 செ.மீ. உயரம், 5 கிலோ எடை கொண்ட ராட்சத பழங்கால முட்டைகள் ஏராளமான கிடைத்தன. அவை இந்த பறவையின் முட்டையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த பறவைகள் 9 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து இருக்கலாம் என்று கூறுகின்றனர்.

ideal-image

Share This Post

Post Comment