பாரதியாரின் கொள்ளுப் பேரனுடன் யாழ்ப்பாணத்தில் இந்திய குடியரசுத்தின விழா!

ekuruvi-aiya8-X3

india-democratic-day-3-720x450இந்தியாவின் 68ஆவது குடியரசுத் தினம் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரகத்தில் கொண்டாடப்பட்டுள்ளது.

இந்தியத் துணைத் தூதுவர் என் நடராஜன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மகாகவி பாரதியாரின் கொள்ளுப்பேரனான ராஜ்குமார் பாரதி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

நிகழ்வில் இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டு, இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டதன் பின்னர், இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் குடியரசுத் தின செய்தியை இந்திய துணைத் தூதுவர் வாசித்தார். அத்தோடு, சிறப்பு அதிதியான ராஜ்குமார் பாரதியின் சிறப்புரையும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் விசேட தேவையுடைய மாணவர்கள் கலந்துகொண்டனர்.

india-democratic-day-2

Share This Post

Post Comment