கவர்னருடன் எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு

Facebook Cover V02

edappadipalanisamy-OPanneerselvam-meeting-with-the-Governorமகாத்மா காந்தியின் 148-வது பிறந்த நாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி மெரீனா கடற்கரையில் உள்ள காந்தி சிலைக்கு கவர்னர் வித்யா சாகர்ராவ், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-மந்திரி ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் வித்யாசாகர்ராவை சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை வருகிற 4-ந்தேதி ஐகோர்ட்டில் வருகிறது. இந்த நிலையில்தான் கவர்னருடன் சந்திப்பு நடைபெற்று உள்ளது.

தமிழகத்துக்கு புதிய முழு நேர கவர்னராக பன் வாரிலால் புரோகித் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் வருகிற 6-ந்தேதி பதவி ஏற்கிறார். புதிய கவர்னர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் நடைபெற்ற இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றது

Share This Post

Post Comment