தொடரும் பன்னங்கண்டி மக்களின் போராட்டம்!

Facebook Cover V02

Kili-Panangandi-Protest-01-720x450கிளிநொச்சி பன்னங்கண்டி மக்கள் முன்னெடுத்துவரும் அடிப்படை உரிமை போராட்டம் இன்று 12ஆவது நாளாகவும் தீர்வின்றி தொடர்கின்ற நிலையில், மக்கள் பிரதிநிதிகளான அரசியல்வாதிகள் மீது இம்மக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.

தேர்தல் காலத்தில் தம்மை வந்து சந்திக்கும் அரசியல்வாதிகள், காணிகளையும் வீடுகளையும் பெற்றுத்தருவதாக வாக்குறுதியளிக்கின்ற போதிலும் தேர்தலின் பின்னர் தம்மை ஏறெடுத்தும் பார்ப்பதில்லையென தெரிவித்தனர்.

கடந்த 1990ஆம் ஆண்டு முதல் பன்னங்கண்டி பகுதியில் வாழ்ந்துவரும் 187 குடும்பங்களுக்கான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படாத நிலையில், அரசினால் வழங்கப்பட்ட தகரக் கொட்டில்களிலேயே இம் மக்கள் காலத்தை கழித்து வருவதாக குற்றம் சுமத்தப்படுகின்றது

Share This Post

Post Comment