தென்னாபிரிக்க, அவுஸ்ரேலிய, இந்திய, பங்களாதேஷ் தலைவர்களைச் சந்தித்தார் மைத்திரி!

Facebook Cover V02

maithri-jagarta-meetings-1இந்தியப் பெருங்கடல் விளிம்பு நாடுகளின் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்களின் உச்சி மாநாட்டில் பங்கேற்ற சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன, தென்னாபிரிக்கா, அவுஸ்ரேலியா, பங்களாதேஷ், மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுக்களை நடத்தினார்.

இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் நேற்று இந்தியப் பெருங்கடல் விளிம்பு நாடுகளின் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்களின் உச்சி மாநாட்டு இடம்பெற்றது.

21 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றிருந்த இந்த மாநாட்டில் சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவும் கலந்து கொண்டு உரையாற்றினார்.

இதன் பின்னர், சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் தென்னாபிரிக்க அதிபர் ஜேக்கப் சூமா, இந்திய துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி, அவுஸ்ரேலியப் பிரதமர் மல்கம் ரேன்புல், பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோரைச் சந்தித்து இருதரப்பு விவகாரங்கள் குறித்துப் பேச்சு நடத்தினார்.

இந்தச் சந்திப்புகளில் சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

maithri-jagarta-meetings-2-1024x797 maithri-jagarta-meetings-3 maithri-jagarta-meetings-4

Share This Post

Post Comment