சர்வதேச பங்களிப்புத் தொடர்பாக ஐநா செயலருக்கு தெளிவுபடுத்தப்படும்!

ekuruvi-aiya8-X3

tna-300x200தமிழ் பேசும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், விசாரணை பொறிமுறையில் சர்வதேசத்தின் பங்களிப்பு அமையவேண்டியதன் அவசியம் என்பன குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பான் கீ மூனுக்கு விளக்கமளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தியோகப்பூர்வ பயணமாக இலங்கைவரும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ-மூன், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்­மந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போதே தமிழ் மக்கள் பிரச்சினைகள் குறித்து பான் கீ-மூனுடன் விவாதிக்கப்படவுள்ளது. மேலும் தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பாகவும் குறித்த சந்திப்பின் போது விரிவாக விளக்கமளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் 31ஆம் திகதி புதன்கிழமை உத்தியோகப்பூர்வ விஜயமாக இலங்கை வரவுள்ள பான் கீ-மூன், செப்டெம்பர் மாதம் முதலாம் மற்றும் இரண்டாம் திகதிகளில் இலங்கையில் தங்கியிருந்து சந்திப்புக்களில் கலந்துக்கொள்ளவுள்ளார்.

இவ்விஜயத்தின் போது பான் கீ-மூன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, சபாநாயகர் கரு ஜயசூரிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே உள்ளிட்டோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ-மூன் கடந்த 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததுடன் சில தினங்களில் இலங்கைக்கு விஜயம் செய்து நிலைமைகளை அவதானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment