ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை கூட்டுமாறு பங்காளிக் கட்சிகள் சம்பந்தனுக்கு அழுத்தம்!

ekuruvi-aiya8-X3

sampanthanஅரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட வரைபு மற்றும் புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை தொடர்பாக கலந்தாலோசித்து முடிவெடுப்பதற்காக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை கூட்டுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் அழுத்தம் கொடுத்து கடிதம் அனுப்பியுள்ளன.

இது தொடர்பாக, நேற்று முன்தினம் ஈபிஆர்எல்எவ் கட்சி இரா.சம்பந்தனுக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தது. அத்துடன் புளொட் அமைப்பும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தைக் கூட்டுமாறு வலியுறுத்தியிருந்தது.

எனினும், இக்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்த சம்பந்தன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

எதிர்வரும் 19ஆம் நாள் முற்பகல் 11 மணிக்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சம்பந்தன் இது தொடர்பாக கடிதம் அனுப்பியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் உறுதிப்படுத்தியுள்ளார்.

இருப்பினும், இது தொடர்பில் ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சித்தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரனுடன் தொடர்புகொண்டு கேட்டபோதுஇ எந்தக் கூட்டம் தொடர்பிலும் தனக்கு தகவல் வழங்கப்பட்டிருக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

Share This Post

Post Comment