ஐநா பணியகத்துடன் இலங்கை இணங்கிச் செயற்படவேண்டும்!

Facebook Cover V02

un3535ஐநா மனித உரிமைகள் ஆணையத்துடன் இலங்கை அதிகம் ஒத்துழைத்துச் செயற்படவேண்டுமென ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐநா மனிதவுரிமையாளர் மாநாட்டின் 31ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றும்போது, இலங்கை ஐநாவுடன் ஒத்துழைத்துச் செயற்படுவதை வரவேற்றுள்ளார்.

மேலும், கடந்த ஆண்டு ஐநா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை, இலங்கை அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு, ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் இன்னும் நெருக்கமான முறையில் இணைந்து செயற்படவேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் இலங்கைக்கு அனைத்துலக சமூகம் எவ்வாறான உதவிகளை வழங்கலாம் எனத் தாம் மனித உரிமைகள் ஆணையாளரின் கருத்துக்களை எதிர்பார்ப்பதாகவும் ஐரோப்பியப் பிரதிநிதி குறிப்பிட்டுள்ளார்.

Share This Post

Post Comment