7 வருடங்களின் பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இலங்கை பணிப் பெண்

Facebook Cover V02

saddamதுபாயில், தனக்கு அனுசரணையளித்த எஜமானிடம் இருந்து தங்கம், வைரம் உள்ளிட்ட பெருந்தொகை பொருட்களை கொள்ளையிட்டதாக கூறப்படும், இலங்கைப் பெண் ஒருவர், சுமார் ஏழு வருடங்களின் பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் 200,000 திர்ஹம் பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

கடந்த 2010ம் ஆண்டு ஜூன் மாதம் தனது தாயின் மருத்துவத்தின் நிமித்தம் வௌிநாடு சென்றிருந்த குறித்த எஜமானிக்கு, இலங்கைக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டமையால் கிடைக்கப் பெற்ற தொலைபேசி கட்டண பட்டியல் குறித்து தெரிவிக்க, அவரது சகோதரி, அழைப்பை மேற்கொண்டுள்ளார்.

இதனையடுத்து, சந்தேகநபரான இலங்கை பணிப் பெண்ணின் ஊழிய ஒப்பந்தம் மற்றும் விசாவை இரத்துச் செய்து அவரை மீள நாட்டுக்கு திருப்பியனுப்ப இரு சகோதரிகளும் தீர்மானித்துள்ளனர்.

எனினும், பின்னர் பொலிஸில் முறைப்பாடொன்றை வழங்கியுள்ள, சம்பந்தப்பட்ட எஜமானி, சந்தேகநபரான இலங்கை பணிப் பெண் தனது வீட்டில் இருந்து பெறுமதி மிக்க பொருட்களை கொள்ளையிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இதற்கமைய, இலங்கைக்கு திரும்ப முற்பட்ட குறித்த பணிப் பெண்ணை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

இது குறித்த குற்றப் பத்திரிகையில் 35 வயதான குறித்த இலங்கை யுவதி, எஜமானார் வீட்டில் இருந்து தங்கம், வைரம் உள்ளிட்ட பெறுமதி மிக்க நகைகள் மற்றும் கடிகாரங்களை கொள்ளையிட்டுள்ளதாக, சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.

எதுஎவ்வாறு இருப்பினும், சந்தேகநபர் தரப்பில் குற்றம் ஒப்புக் கொள்ளப்படவில்லை.

இதற்கமைய, இந்த வழக்கின் தீர்ப்பு ஏப்ரல் 27 ம் திகதி அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக வௌிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

Share This Post

Post Comment