டெல்லியில் கடும் பனிமூட்டம்: விமானச் சேவைகள் பாதிப்பு

ekuruvi-aiya8-X3

delliடெல்லியில் இன்று (2)நிலவிய கடும் பனிமூட்டத்தால் ஏராளமான விமானச் சேவைகள் பாதிப்படைந்துள்ளது.

டெல்லியில் வழக்கம்போல் இந்த ஆண்டும் குளிர்காலத்தில் கடுனையான உறைப்பனி பெய்து வருகிறது. பின்னிரவில் தொடங்கும் பனிமூட்டம் காலை 10 மணிவரை விலகாமல் டெல்லி நகரம் முழுவதும் பனித்திரையால் மூட்டப்பட்டதுபோல் காட்சி அளிக்கிறது.

காலை வேளைகளில் சாலைகளில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டுச் செல்லும் அளவுக்கு பனிபெய்து வருகிறது.

இந்நிலையில், டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ள பகுதியிலும் உறைபனி பெய்ததால் ஓடுதளம் பகுதி இருண்டு காணப்பட்டது. ஓடுதளம் பகுதியில் தெளிவான காட்சி இல்லாததால் நேற்று 200-க்கும் அதிகமான விமானங்களின் வருகை மற்றும் புறப்பாட்டு நேரத்தில் தாமதம் ஏற்பட்டது. 16 விமானச்சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இன்றும் இதேநிலை நீடிப்பதால் ஏராளமான விமானங்கள் புறப்பட்டு செல்லும் நேரம் மற்றும் தரையிறங்கும் நேரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை இங்கிருந்து புறப்பட்டு செல்ல வேண்டிய சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.

மஸ்கட் நகரில் இருந்து இன்று அதிகாலை டெல்லிக்கு வந்த ஓமன் ஏர் விமானம் ஜெய்பூர் நகருக்கு மாற்றி அனுப்பப்பட்டது. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானம் விமானம் மும்பை நகருக்கு மாற்றி அனுப்பப்பட்டது.

Share This Post

Post Comment