துப்பாக்கி சூட்டில் காயமடைந்த பண்டா உயிரிழந்தார்

பொலிஸாருடன் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாதாள உலக குழு உறுப்பினரான ஹசித எனப்படும் பண்டா என்பவர் உயிரிழந்துள்ளார்.

panda-shootகுறித்த நபர் கடந்த 4 ஆம் திகதி அதுருகிரிய, ஒருவெல பகுதியில் இடம்பெற்ற பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்து சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் நேற்று (18) மாலை 6.30 மணியளவில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த நபர், மாகந்துரே மதூஷ் மற்றும் அங்கொட லொக்க ஆகிய பாதாள உலக குழு தலைவர்களுடன் மிக நெருக்கமானவர் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் பல்வேறு முக்கிய குற்றங்களுடன் தொடர்புடையவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.






Related News

  • பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவிப்பு
  • டில்ஷான் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்தார்
  • புதிய பிரதமருக்கு எதிராக 122 உறுப்பினர்கள் ஒப்பமிட்ட பிரேரணை கையளிப்பு
  • பாராளுமன்றம் நாளை காலை வரை ஒத்தி வைப்பு
  • ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவு
  • கட்சி வழங்கும் எந்த பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள தயார்
  • பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு ஆதரவான மனுக்களும் விசாரணைக்கு
  • அனைத்து குற்றச்சாட்டுக்களை பொறுமையாக முகங்கொடுத்தேன் – ரணில்
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *