பனாமா ஆவணங்கள் குறித்து முடிவெடுக்க அவசரப்பட தேவையில்லை

ekuruvi-aiya8-X3

Mahendranசர்ச்சைக்குறிய பனாமா ஆவணங்களில் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் சரியானதா என உறுதிப்படுத்திக் கொள்ளப்பட வேண்டும் என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூன் மஹேந்திரன் கூறியுள்ளார்.

குறித்த ஆவணக்கசிவு சம்பந்தமாக முதலில் செய்யப்பட வேண்டியது அதுவே என்று இன்று (12) காலை மத்திய வங்கி வளாகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் கூறியிருந்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

“இது சம்பந்தமாக நாம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம். அங்கு மில்லியன் கணக்கான ஆவணங்கள் இருக்கின்றன. முதலில் இந்த ஆவணங்கள் சம்பந்தமாக உண்மைத் தன்மை உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

இரண்டாம் தரப்பினரால் வெளியிடப்பட்டுள்ள இந்த தகவல்கள் சம்பந்தமாக விசாரணை செய்வதற்கு முன்பாக அதனை உறுதிப்படுத்துவதற்கு நாம் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.

இது சம்பந்தமாக முடிவெடுப்பதற்கு நான் அவசரப்படமாட்டேன்” என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூன் மஹேந்திரன் கூறியுள்ளார்.

Share This Post

Post Comment