பனாமா பேப்பர்ஸ் இரகசியக் கசிவில் அமெரிக்கா – விக்கிலீக்ஸ்

Facebook Cover V02

CfTwzxAWAAAsGG_பனாமா பேப்பர்ஸ் இரகசியக் கசிவின் பின்னணியில் அமெரிக்காவும், கோடீஸ்வரரான ஜோர்ஜ் சோரோசும் உள்ளனர் என விக்கிலீக்ஸ் குற்றம்சாட்டியுள்ளது.

ரஷ்ய அதிபர் புடினை வைத்தே இரகசியக் கசிவை வெளிக்கொணர்வதற்கு அமெரிக்காவின் யுஎஸ்எயிட் நிறுவனமும் கோடீஸ்வரர் ஜோர்ஜ் சோரோசும் பின்னணியில் இருந்து செயற்பட்டார்கள் என விக்கிலீக்ஸ் தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளது.

OCCRP இணையத்தளத்தின் இத்திட்டத்திற்கு யுஎஸ்எயிட் நிறுவனம் நேரடியாக நிதியுதவி செய்து இரகசியங்களை வெளியிடத்தூண்டியது எனவும் விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.

OCCRP இன் இந்த நடவடிக்கை அதன் இறையாண்மையைக் குறைத்து மதிப்பிடும் நிலைக்குத் தள்ளியிருப்பதாகவும் அது மேலும் தெரிவித்துள்ளது.

எப்படியிருப்பினும், பனாமா சட்ட நிறுவனமான மொசாக் பொன்சேகா நிறுவனத்தின் ஆவணக்கசிவினால் உலகிலுள்ள செல்வந்தவர்கள் மற்றும் செல்வாக்குமிக்கவர்கள் எவ்வாறு தமது பணங்களை தமது நாட்டுக்கு வெளியில் பதுக்கிவைத்தனர் என்கின்ற விடயம் வெளிச்சமாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment