பனாமா ஆவணங்கள் குறித்து ஆராய்வதற்கு விசேட குழு நியமனம்

ekuruvi-aiya8-X3

panamaபனாமா ஆவணங்கள் குறித்து ஆராய்வதற்கு விசேட குழுவொன்றை இலங்கை அரசாங்கம் நியமிக்க உள்ளது.

வரி ஏய்ப்பில் ஈடுபட்டு இரகசியமாக பணத்தை முடக்கியவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து இலங்கையர்கள் தொடர்பிலும் விசாரணை நடத்தப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 9ம் திகதி பனாமா ஆவணம் குறித்த விபரங்கள் அம்பலப்படுத்தப்பட உள்ளது.

2013ம் ஆண்டு வரி ஏய்ப்பு தொடா்பில் 46 இலங்கையர்கள் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்ட போதிலும் அது குறித்து அப்போதைய அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஏற்கனவே குறிப்பிடப்பட்டவர்கள் மற்றும் பனாமா ஆவணத்தில் குறிப்பிடப்பட்டவர்கள் தொடர்பில் விசேட குழு ஆராய உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஊழல் மோசடிகளை இல்லாதொழிப்பதாகத் தெரிவித்தே இந்த அரசாங்கம் ஆட்சி பீடம் ஏறியது என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment