’தூக்க மாத்திரைக்காக ஓடும் பணக்காரர்கள்’ – மோடி

sdsd

Modi_1311500 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை செல்லாததாக்கும் அரசின் முடிவால் பணக்காரர்கள் தூக்கமிழந்து தவிப்பதாகவும் தூக்க மாத்திரைக்காக ஓடுவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். எனது முடிவுகள் அனைத்தும், தான் தயாரிக்கும் தேநீரைப் போலவே கொஞ்சம் ஸ்டாராங்காகவே இருக்கும் என்றும் அவர் பேசினார்.

உத்தரப்பிரதேச மாநிலம் காஸிப்பூர் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தனது சிறுவயதில் ரயில்நிலையங்களில் தேநீர் விற்ற நாட்களை நினைவுகூர்ந்தார்.

அந்த நாட்களில் தான் தயாரிக்கும் தேநீரைப் போலவே தனது முடிவுகளும் கொஞ்சம் ஸ்ட்ராங்காக இருக்கும் என்று பேசினார். 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாததாக அறிவித்த முடிவு சட்டவிரோதமாக கறுப்புப் பணத்தை வைத்திருப்பவர்களைக் குறிவைத்தே எடுக்கப்பட்ட முடிவு என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசின் இந்த முடிவால் பணக்காரர்கள் தூக்கமிழந்து தவிப்பதாகவும், தூக்க மாத்திரைக்காக ஓடுவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அதே சமயம் ஏழைகள் நிம்மதியாக உறங்கத் தொடங்கியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

‌நாட்டில் ஊழலை ஒழிக்க வேண்டுமென்றால், மக்கள் சில சிரமங்களை பொறுத்துக்கொள்ளத் தயாராக வேண்டும் எ‌ன்றும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.

வீட்டை தூய்மைப்படுத்த சுண்ணாம்பு பூசும் போது சகித்துக்கொள்ள முடியாத நாற்றம் வீசத்தான் செய்யும் என்றும் அதை ஏற்கத்தான் வேண்டும்‌ என்றும் மோடி பேசினார்.

அரசின் அதிரடி அறிவிப்பால் என்ன செய்வது என்று தெரியாமல் எதிர்க்கட்சிகள் திகைத்துப் போயுள்ளதாகவும் இதன் காரணமாகவே குற்றச்சாட்டுகளை அள்ளி வீசி வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

Share This Post

Post Comment