யார் பணக்காரன் என்பதில் போட்டி: பணத்தை கொளுத்தி மல்லுக்கட்டிய நண்பர்கள்

Chinese-men-set-cash-on-fireசீனாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள அன்ஹுய் மாகாணத்தில் உள்ள தியான்சங்க் பகுதியில் இருக்கும் உணவகம் ஒன்றில் கடந்த மாதம் 24-ம் தேதி இரு நண்பர்கள் சாப்பிட வந்துள்ளனர். சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போதே, யார் அதிக பணம் வைத்துள்ளார் என இருவருக்கும் இடையே காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில். ஒருவருக்கு வில்லங்க ஐடியா ஒன்று தோன்றியுள்ளது.

“உன்னிடம் உள்ள பணத்தை நீ தீயிட்டு எரித்துக்காட்டு, என்னிடம் உள்ள பணத்தை நான் எரிக்கிறேன்” யாரிடம் கடைசி வரை பணம் உள்ளதோ அவரே வெற்றியாளர் என அந்த ஐடியா மணி கூற, பண எரிப்பு வைபோகம் இனிதே தொடங்கியது. சீன ரூபாய்யான 100 யுவான் நோட்டுகளை எடுத்து ஒவ்வொன்றாக இருவரும் மாறி மாறி கொளுத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்தை சுற்றியுள்ளவர்கள் வீடியோவாக எடுக்க, சமூக வலைதளங்களில் தீயாக பற்றிக்கொண்டது. இதனையடுத்து, வீடியோ குறித்து விசாரணையில் இறங்கிய போலீசார், ரூபாயை கொளுத்தியவர்களை கைது செய்து, அபராதம் கட்டிய பின்னர் விடுவித்தனர்.

ஆனால், அந்த போட்டியில் யார் வெற்றி பெற்றது? என்பது கடைசி வரை தெரியவில்லை என்பது தான் வருத்தப்படும் விஷயமாகும்.

Share This Post

Post Comment