ஒபாமா மகள் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில்

US-presidents-daughter-Malia-அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு மாலியா (வயது 17), ஷாசா (15) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் வாஷிங்டனில் உள்ள சைட்வெல் பிரண்ட்ஸ் என்ற தனியார் பள்ளிக்கூடத்தில் படித்து வருகிறார்கள்.

இவர்களில் மாலியாவுக்கு இந்த ஆண்டோடு பள்ளி படிப்பு முடிகிறது. இதையடுத்து அவர் கல்லூரியில் சேர வேண்டும். அவர் அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற ஹார்டுவர்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க போவதாக வெள்ளை மாளிகை அலுவலகத்தில் இருந்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனவரி 20-ந்தேதியுடன் முடிகிறது. ஆனாலும் அவர் 2-வது மகள் ஷாசா பள்ளி முடியும் வரை வாஷிங்டன் நகரிலேயே தங்கப்போவதாக கூறியுள்ளார். எனவே ஹார்டுவேர்டு பல்கலைக்கழகத்தில் சேரும் மாலியா விடுதியில் தங்கி படிக்கலாம் என கருதப்படுகிறது.

இதே பல்கலைக்கழகத்தில் உள்ள சட்ட கல்லூரியில் தான் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்சேலி ஆகியோர் படித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment