ஐ.எஸ். பாலியல் அடிமை- ஐ.நா.வின் நல்லெண்ணத் தூதராக உயர்ந்த ஈராக் பெண்

Nadia-Murad-1024x768ஐ.எஸ். பாலியல் அடிமையாக இருந்த நதியா முராத் இன்று ஐ.நா.வின் மனிதக் கடத்தலுக்கு எதிரான நல்லெண்ணத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். 2014-ம் ஆண்டில் ஐ.எஸ் தீவிரவாதிகள் ஈராக் நாட்டில் புகுந்து தாக்குதல் நடத்தினர். அப்போது நதியாவின் கண்ணெதிரே அவரின் சகோதரர், தாய் இருவரும் படுகொலை செய்யப்பட்டனர்.

தொடர்ந்து ஐ.எஸ் தீவிரவாதிகள் 19-வயதான நதியாவை தங்களுடன் கூட்டிச்சென்று அவரை பாலியல் அடிமையாக வைத்திருந்தனர். ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் இருந்து தப்பிக்க நதியா பலமுறை முயன்றும் அவரது முயற்சி வெற்றி பெறவில்லை.

இந்த சூழ்நிலையில் ஒருமுறை 6 பேர் ஒன்று சேர்ந்து நதியாவை பலாத்காரம் செய்ததில் தனது சுயநினைவை அவர் இழந்தார். பின்னர் ஒருவழியாக அங்கிருந்து ஜெர்மனி நாட்டிற்கு தப்பிசென்ற நதியாவுக்கு ஜெர்மனி நாட்டில் அவருக்குத் தேவையான மருத்துவ உதவி கிடைத்தது.

இன்று ஐ.நா.வின் மனிதகடத்தலுக்கு எதிரான நல்லெண்ணத் தூதுவராக நதியா நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தனது வலைதளத்தில் நதியா ”இனப்படுகொலையில் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஒரு புதிய வாழ்வை அமைத்துத் தருவது மற்றும் மனித கடத்தலை தடுப்பதே எனது லட்சியம்” என்று தெரிவித்துள்ளார்.

Share This Post

Post Comment