பாழடைந்த கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: இடிபாடுகளில் சிக்கி 4 பேர் பலி

Thermo-Care-Heating

Four-including-three-children-killed-in-house-collapseஉத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள சித்ரகூட் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஹன்னா பிக்காயூனா. இங்கு பாழடைந்த கட்டடம் ஒன்று இருந்துள்ளது. இந்த கட்டடம் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்ததால் அதில் மக்கள் யாரும் வசிக்காமல் இருந்தனர்.

இந்த கட்டம் அருகே இன்று சிலர் நடந்து சென்றனர். அப்போது திடீரென கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் சோனம் (7), அன்ஷ் (5), சவுமியா (5) மற்றும் கட்தி (35) ஆகியோரி கட்டட இடிபாட்டிற்கு சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

சம்பவ இடத்திற்குச் விரைந்த மீட்புக் குழுவினர் அந்த நான்கு பேரின் உடலையும் மீட்டு உடல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூன்று குழந்தைகள் உள்பட நான்கு பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ideal-image

Share This Post

Post Comment