பாகிஸ்தான் அதிபர் மம்நூன் ஹுசெய்ன் சிறிலங்கா அதிபரைச் சந்தித்தார்

ekuruvi-aiya8-X3

pak-sri-lanka-presidents-450x300சிறிலங்காவுக்கு குறுகிய காலப் பயணம் ஒன்றை மேற்கொண்ட பாகிஸ்தான் அதிபர் மம்நூன் ஹுசெய்ன், நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நேற்றுமாலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இந்தோனேசியப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பும் வழியிலேயே பாகிஸ்தான் அதிபர் நேற்று பிற்பல் திடீரென சிறிலங்கா வந்தார்.

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்று விட்டுத் திரும்பும் வழியில் அவர் சிறிலங்காவுக்குத் திடீர் பயணம் மேற்கொண்டதற்கான காரணம் அறிவிக்கப்படவில்லை.

எனினும், இருநாடுகளின் தலைவர்களும் வழக்கமான விவகாரங்கள் குறித்து கலந்துரையாடியதாக சிறிலங்கா அதிபர் செயலகம் தெரிவித்துள்ளது.

Share This Post

Post Comment