பாக்கெட்டில் வெடித்துச் சிதறிய ரெட்மி நோட் 4: காரணம் சொன்ன சியோமி

ekuruvi-aiya8-X3

Xiaomi-replies-ஆந்திர பிரதேச மாநிலத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த வாடிக்கையாளரின் ரெட்மி நோட் 4 பாக்கெட்டிலேயே வெடித்துச் சிதறியது. போன் வெடித்ததில் ஆடையில் தீப்பற்றியதைத் தொடர்ந்து, ஆடையில் தண்ணீர் ஊற்றி தீயை கட்டுப்படுத்தியதாக தெரிவித்தார்.
இருசக்கர வாகனத்தில் செல்லும் போது பாக்கெட்டில் வைத்திருந்த ரெட்மி நோட் 4 வெடித்துச் சிதறிய சம்பத்திற்கு சியோமி அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது.,
வெடித்து சிதறிய ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனினை ஆய்வு செய்ததில், போனிற்கு வெளிப்புற அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் பேக் கவர் மற்றும் பேட்டரி வளைந்து, போனின் ஸ்கிரீன் உடைந்துள்ளது தெரியவந்துள்ளது. போனில் தொடர்ச்சியான ஆய்வுகளுக்கு பின்னரே வெடித்து சிதறியதற்கான முழு விவரம் தெரியவரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தெலுங்கு மொழியில் இயங்கி வரும் சாக்ஷி இணையதளத்தில் முதலில் பதிவான இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சூர்யகிரன் ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனினை ப்ளிப்கார்ட் தளத்தில் இருந்து 20 நாட்களுக்கு முன் வாங்கியதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் போன் வெடித்துச் சிதறிய சம்பவத்தை நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்போவதாகவும் தெரிவித்துள்ளார். தரமற்ற சாதனங்களை விற்பனை செய்தது மற்றும் தனக்கு ஏற்பட்ட காயங்களுக்கு இழப்பீடு கோர இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
முன்னதாக பெங்களூரு விற்பனை மையத்திலும் ரெட்மி நோட் 4 வெடித்து சிதறியது. புதிய ஸ்மார்ட்போனில் சிம் கார்டு பொறுத்தும் போது வெடித்து சிதறியது. இச்சம்பவம் விற்பனை மையத்தின் சிசிடிவி கேமராவிலும் பதிவானது. இங்கு பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் தனது ஸ்மார்ட்போனினை பூர்விகா மொபைல் ஸ்டோரில் வாங்கியதாக தெரிவித்திருந்தார். ரெட்மி நோட் 4 முழுமையாக எரிந்து விட்ட நிலையில், யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை.

Share This Post

Post Comment