ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாகிஸ்தான் படை அத்துமீறி தாக்குதல்; இந்தியா பதிலடி

ekuruvi-aiya8-X3

Pakistan-targetsஜம்மு மற்றும் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் அமைந்த எல்லை கட்டுப்பாடு கோட்டு பகுதியில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளன.  அவர்கள் திக்வார் பிரிவில் இன்று காலை 7.30 மணியளவில் தங்களது தாக்குதலை நடத்தினர்.

இதனை தொடர்ந்து எல்லையில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவமும் பதிலடியாக தாக்குதலை நடத்தியது.  இந்த தாக்குதலில் காயம் அடைந்தவர்கள் பற்றிய தகவல்கள் வெளிவரவில்லை.

இந்த வருடத்தில் ஜம்மு மற்றும் காஷ்மீரின் எல்லை கட்டுப்பாடு கோடு மற்றும் சர்வதேச எல்லை ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட அத்துமீறிய தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த 16 வீரர்கள் உள்பட 31 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.

Share This Post

Post Comment