ஆப்கானிஸ்தான் எல்லையை மூடியது பாகிஸ்தான்

ekuruvi-aiya8-X3

pak_10பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், பாகிஸ்தான்  சிந்து மாகாணம், செவான் பகுதியில் உள்ள மசூதியில் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி, தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 88 பேர் பலியாகினர். 200 பேர் காயமடைந்தனர். பாகிஸ்தான் பாதுகாப்பு படை நடத்திய பதில் தாக்குதலில் 130 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 350-க்கும் மேற்பட்டோர் கைதாகினர். இவர்களில் பெரும்பாலானோர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டது.

இதனால், ஆப்கானிஸ்தான் உடனான எல்லையை மூட இருப்பதாக பாகிஸ்தான் திடீரென அறிவித்தது. அதன்படி, தோர்க்காம் மற்றும் சமான் எல்லைப் பகுதிகள் காலவரையறை இன்றி மூடப்படுவதாக எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

முன்னதாக மூடப்பட்டிருந்த ஆப்கனுடனான எல்லை, கடந்த முறை தற்காலிகமாக, 2 நாட்களுக்கு திறந்துவிடப்பட்டிருந்தது. இதில் 35,000 மக்கள் எல்லையைக் கடந்தனர். பாகிஸ்தானில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலே இம்முறை எல்லையை மூடுவதற்கான காரணம் என்று கூறப்படுகிறது.

Share This Post

Post Comment