சுதந்திர தினத்தை முன்னிட்டு 30 இந்திய சிறைக்கைதிகளை விடுவித்தது பாகிஸ்தான்

pak_jailபாகிஸ்தான் நாட்டில் நாளை(ஆகஸ்ட் 141) சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நல்லெண்ண நடவடிக்கையாக இந்திய சிறைக்கைதிகள் 30 பேரை பாகிஸ்தான் விடுதலை செய்தது. விடுவிக்கப்பட்ட இந்திய சிறைக்கைதிகள் 30 பேரில் 27 பேர் மீனவர்கள் ஆவர். மனிதாபிமான அடிப்படையில்  எடுக்கப்பட்ட நடவடிக்கை இது என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை, இந்திய கைதிகள் விடுதலை குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், இந்தியாவும் இதுபோன்ற நல்லெண்ண நடவடிக்கையை மேற்கொள்ளும் என நம்புவதாக பாகிஸ்தான் தெரிவித்தது. பாகிஸ்தானால் விடுவிக்கப்பட்டுள்ள இந்திய சிறைக்கைதிகள், வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரபியே கடற்பகுதியில், இருநாடுகளுக்கு இடையேயான எல்லை தெளிவாக வரையறுக்கப்படாதாதல், அப்பகுதியில் மீன் பிடிக்கச்செல்லும் மீனவர்களை இருநாட்டு கடற்படையும் அவ்வப்போது, மாற்று நாட்டு மீனவர்களை கைது செய்கின்றது. கடந்த ஜூலை மாதம் மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த அறிக்கையின் படி, பாகிஸ்தான் சிறைச்சாலைகளில் 418 மீனவர்கள் உட்பட 470 இந்தியர்கள் அடைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.





Related News

  • 10 வயது மாணவன் மீது பாலியல் தாக்குதல் – ஆசிரியர் மீது குற்றச்சாட்டு
  • aris
  • ஈழத்தமிழர்களின் பொதுவாக்கெடுப்புக்கான இலச்சினையை வரைய ஒரு வாய்ப்பு !!
  • சுதந்திர தினத்தை முன்னிட்டு 30 இந்திய சிறைக்கைதிகளை விடுவித்தது பாகிஸ்தான்
  • மாநிலங்களவையில் ‘முத்தலாக்’ மசோதா தாக்கல் செய்யப்படாது, அடுத்த பாராளுமன்ற தொடருக்கு ஒத்திவைப்பு
  • 1,199 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்வு – டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
  • வெள்ளத்தில் மூழ்கிய ரொறன்ரோ – மீட்பு பணிகள் தீவிரம்
  • அமெரிக்காவின் பொருளாதார தடை ஏற்றுக்கொள்ள முடியாதது – ரஷ்யா கருத்து
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *