பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் பெண் எம்.பி.க்கு பாலியல் தொந்தரவு!

ekuruvi-aiya8-X3

Pakistani-female-lawmaker-harassed-in-parliamentபாகிஸ்தான் பாராளுமன்ற சேம்பரில், பாலியல் ரீதியிலான கருத்து தெரிவித்து தொந்தரவு அளித்ததாக மாகாண மந்திரி மீது பெண் எம்.பி. பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

பாகிஸ்தான் நாட்டின் பாராளுமன்றத்தில் சிந்த் மாகாண எம்.பி.யாகவும் சட்ட வல்லுநராகவும் இருப்பவர் நுஷ்ரத் சஹார் அப்பாசி. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை மாகாண மந்திரி இம்தாத் பிடாபி தனது அறைக்கு அழைத்ததாகவும், அங்கு சென்றதும், பாலியல் ரீதியிலான கருத்துக்களை தெரிவித்து தொந்தரவு அளித்ததாகவும் நுஷ்ரத் பரபரப்பு புகார் தெரிவித்தார்.

மந்திரியின் இந்த தகாத செயலை நுஷ்ரத் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் துணை சபாநாயகரும் பெண் தான். ஆனாலும் மந்திரி மீது நடவடிக்கை எடுக்க அவர் மறுக்கிறார் என குற்றம் சாட்டிய நுஷ்ரத், மந்திரி மீது நடவடிக்கை எடுக்காவிடில் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் எச்சரித்தார்.

இந்த சம்பவம் வெளியே தெரிந்துள்ளதால் கட்சியின் தலைமையானது, மாகாண மந்திரியை மன்னிப்பு கேட்குமாறு நிர்ப்பந்தித்துள்ளது. இதனையடுத்து சபையில் வைத்து மாகாண மந்திரி பிடாபி மன்னிப்பு கோரியுள்ளார். நுஷ்ரத் மீது மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் சபையில் பெண்கள் பாதுகாப்புக்காக அதிக அளவிலான சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளதாகவும், அதை பாதிக்கப்பட்ட பெண்கள் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் பெண் எம்.பி நுஷ்ரத் தெரிவித்துள்ளார்.

Share This Post

Post Comment